"சேர்ட் கசங்காமல், வியர்வை வராமல் பந்தாவா இருந்து கைநிறைய காசு வரனும் என்ற mindset"!
யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள இளைஞர்களை கொண்டு வேலையை வாங்குவது கஸ்ரம் என்று பல தொழிலிடங்களில் குமுறுகின்றனர்.

வேலையில்லை என்று அழுகின்ற அதே ஊரில் தான் வேலைக்கும் ஆட்கள் இல்லாமல் ஒவ்வொரு நிறுவனமும் திண்டாடிக்கொண்டு இருக்கு.
யாழ்ப்பாணத்திலுள்ள தொழில் மற்றும் வியாபார நிலையங்களை ஒருக்கால் சென்று பாருங்கள், வேலை செய்பவர்களில் அதிகம் பேர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த, குறிப்பாக மலையக இளைஞர், யுவதிகள் இதற்கு மேலாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்று உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் சிங்கள இன மாணவர்களே அதிகம்.
யாழ்ப்பாணத்து, நிறைய இளைஞர் யுவதிகள் இங்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள், பட் ரிப் ரொப்பாக பைக் பந்தாவென்று திரிகின்றனர், வெளிநாட்டு காசு அவர்களை காப்பாற்றுகின்றது. ரிக்ரொக்கில் che, uzuru, enaku soru song, akkachchi mass, cute என்று, பாட்டுக்கு தலையாட்டிட்டு நடந்து திரியிறவனையெல்லாம் பிரபலம் என்று கொண்டாடிட்டு இருக்காங்கள். வெட்டி பந்தாவுக்கு ஆதாரம் அண்மைய சாவகச்சேரி சம்பவம்.
யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள இளைஞர்களை கொண்டு வேலையை வாங்குவது கஸ்ரம் என்று பல தொழிலிடங்களில் குமுறுகின்றனர். வேலைக்கு வருவான், உடுப்பு கலையாமல் நிற்கனும், சம்பளம் நிறைய வேண்டும், வேலை செய்ய சொல்லி கேட்டால் வேலையை விட்டு போய்விடுவார்கள். வேலை இல்லாமல் போனால் வருமானம் என்ன என்ற பயம் இல்லை, எங்கோ ஒருவன் அனுப்பிட்டு இருக்கிறான், தம்பியா, அண்ணாக, மசைசானா, மாமனா ஏதொவொரு வழியில்.
மலையன் கபே உள்ளிட்ட பல சாப்பாட்டுக்கடைகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுப்பர் மார்க்கெட்களில் சிங்கள மாணவர்கள் பகுதி நேர பணியும், விடுமுறை நாட்களில் முழு நேரமும் செய்கின்றனர்.
ஹோட்டல்கள், பலசரக்கு கடைகள், பேக்கரிகள் எங்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இருக்கின்றனர்.
நான் அறிந்து பல தொழில் ஸ்தாபனங்கள் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் மூடப்பட்டன. ஆட்கள் பிடிக்கிறது கஸ்ரம் எப்படி நடத்துற என்றே தெரியல. RR புரியாணிக்கு முன்பாக ஒரு சாப்பாட்டுக்கடை திறந்து, கொஞ்ச நாளிலேயே பிரபலமாகியிருந்தது, தற்போது பூட்டப்பட்டுள்ளது. விசாரித்தால், வேலைக்கு ஆட்கள் இல்லாமையால் பூட்டியிருக்காம்.
வெளிநாட்டு தொடர்புகள் அடுத்த சந்ததியுடன் எப்படியும் முடிவடையும், அவ்வாறு நடக்கும் போது, யாழ்ப்பாணத்தின் வேலைவாய்ப்பு, தொழில்துறையில் பெரும் மாற்றம் நடக்கும் அதுவரையில் யாரும் இங்கு திருந்தப் போவதில்லை.
சேர்ட் கசங்காமல், வியர்வை வராமல் பந்தாவா இருந்து கைநிறைய காசு வரனும் என்ற mindset இல ஆபத்தான இளம் சமுதாயம் ஒன்று உருவாகியுள்ளது. இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தானது.
ஊர்குருவி