கைதிகளுக்கு கைமாறும் போதைப் பொருட்கள்
.

குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட துணிப் பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜெகத் வீரசிங்க தெரிவித்தார்.
சந்தேக நபரைப் பார்க்க குருவிட்ட சிறைச்சாலையின் பார்வையாளர் பகுதிக்கு வந்த ஒரு பெண், சந்தேக நபருக்குக் கொடுப்பதற்காக பார்வையாளர் பகுதியில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் ஒரு துணிப் பையைக் வழங்கியுள்ளார்.
பின்னர், விருந்தினர் பார்வையிடும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகம் எழுந்ததன் பேரில், துணிகள் அடங்கிய பை ஒழுங்குமுறைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கொண்டு வரப்பட்ட துணிகளை ஆய்வு செய்தபோது, ஹெராயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைக்காக குருவிட்ட பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.