செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி!
சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ,எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பி்த்தக்கது.
செம்மணி மனித புதைகுழியின் பிரதான சூத்திரதாரியாக தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே அடையாளம் காட்டும்இராணுவ அதிகாரி கப்டன் லலித் ஹேவா (இராணுவ இலக்கம்- 61834) கடந்த ஆண்டு இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று இருக்கின்றார்
ஜயசிங்க லலித் துசித குமார ஹேவா (Jayasinghe Lalith Thusitha Kumara Hewa) என்கின்ற முழு பெயரினால் அடையாளம்காட்டப்படும் இவருக்கு திரு மைத்திரிபால சிறிசேனா பிரிகேடியர் (Brigadier) தர அதிகாரியாக 2018 ஆம் ஆண்டு பதவிஉயர்வு வழங்கி இருக்கின்றார்
மருத்துவ காரணங்கள் அடிப்படையில் 13 மாசி (February) 2024 திகதி முதல் பிரிகேடியர் லலித் ஹேவாவிற்கான ஓய்வைஅப்போதைய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே அங்கீகரித்திருக்கின்றார்
பிரிகேடியர் லலித் ஹேவா கைது செய்யப்பட்டு நியாயமான விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படாமல் செம்மணிகுற்ற வழக்கு முன்னோக்கி நகர எந்த வாய்ப்பும் இல்லை.