Breaking News
மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பகுதியில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண்!
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24,34,35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
1.png)
மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பகுதியில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ கேரள கஞ்சா, 50 கிராம் ஐஸ், 25 கிராம் ஹெரோயின் போன்றவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 24,34,35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சில காலமாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதோடு கைதான குறித்த பெண்ணின் கணவரும் அதே குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக தகவல்களை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.