இலங்கை வரலாற்றில் 210 ஆண்டுகளுக்கு பின் – மீண்டும் ஒரு “விக்கிரமசிங்க” கைதானார்...!
,

இலங்கை வரலாற்றில் 210 ஆண்டுகளுக்கு பின் – மீண்டும் ஒரு “விக்கிரமசிங்க” கைதானார்...!
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் (1815) முதல் ரணில் விக்கிரமசிங்க (2025) வரை வரலாற்று சம்பவம்
1815 – கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் கைதானார்.!
2025 – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.!
இலங்கை அரசியலில் ஆட்சியின் உச்சியில் இருந்தவர்களில் கைதாகிய நிகழ்வுகள் மிக அபூர்வம்.
1815 ஆம் ஆண்டு, கண்டியின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயர்களால் சிறைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் 210 ஆண்டுகள் கடந்த பின்பு, 2025 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார்.
இடைப்பட்ட கால வரலாறு...
பிரித்தானிய ஆட்சியாளர்கள்,
1948 சுதந்திரத்திற்குப் பின் வந்த பிரதமர்கள்,
1978 அரசியலமைப்பின் கீழ் வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள்,
இவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் கைது செய்யப்படவில்லை.
புதிய வரலாறு...
ரணில் விக்கிரமசிங்க கைதாகியிருப்பது,
மன்னராட்சி காலத்திற்குப் பின், மக்களாட்சி காலத்தில் முதலாவது அரச தலைவர் கைது எனும் வரலாற்று சிறப்பை உருவாக்கியுள்ளது.
"குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கு இருந்த அரசியல் அமைப்பின் உச்ச வரம்பு சலுகைகளை நீக்கி நீதிமன்றில் வழக்கு தொடர முடியும் என்ற சட்ட ஏற்பாட்டை கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்ஹவே இன்று தான் கொண்டு வந்த சட்ட திருத்தம் மூலம் சிறை சென்றுள்ளார்"
அடுத்தது என்ன?
இச்சம்பவத்துடன், சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பிரிவுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கப்போகிறது.