Breaking News
எதிர்ப்பரசியலின் உலகளாவிய குறியீடு.விராஜ் மென்டிஸ்!
தலைவர் பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் .

விராஜ் மெண்டிஸ் மறைந்து இன்றுடன் ( 16.08.2024) ஒரு வருடமாகிறது.
இப்போது போலுள்ளது அவரது சாவுச் செய்தி. ஒரு பெரும் வெற்றிடம் இட்டு நிரப்பப்படாமலேயே உள்ளது.
சமகாலத்தில் NPP / IMF/ UNHRC என்று ஒரு வலைப் பின்னல் ஈழப் போராட்டத்தை புவிசார் அரசியல் பின்னணியில் சுற்றி வளைப்பதை அதற்கேயுரிய தன்மைகளுடன் புரிந்து கொண்டு எதிர்வினையாறக் கூடிய - அதன் முடிச்சுக்களை அவிழ்க்கக் கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு ஆளுமையாக இருந்தவரை நாம் இழந்து விட்டதன் பெறுமதி இந்த ஓராண்டுகளில் இன்னும் தீவிரமாக எம்மைத் தாக்குகிறது.
அடுத்த தலைமுறையிலிருந்து இவர் போன்ற ஆளுமைகளை வளர்த்தெடுத்து ஈழப் போராட்டத்தை முன்னகர்த்துவதுதான் அவருக்கான உண்மையான அஞ்சலியாகும்.
அவர் மறைவின் போது எழுதிய பதிவு கீழே.

தமிழ்த் தேசத்திற்கு இன்னொரு பேரிழப்பு. தமிழீழ விடுதலைக்காய் தன்னை முழுமையாக ஒப்படைத்திருந்த சிங்கள ஆளுமை விராஜ் மென்டிசை ( Viraj Mendis) இன்று தமிழீழம் இழந்திருக்கிறது.
விராஜின் இழப்பு 2009 தமிழின அழிப்பின் பின் இந்த இனம் சந்தித்துள்ள ஒரு பேரூழி என்பது ஒரு மிகைப்படுதப்பட்ட கூற்றாகப் பலர் கருதலாம். ஆனால் மிகவும் துயர் தரும் உண்மை அதுதான்.
இதை நாம் புரிந்து கொள்ள அவரது வாழ்வையும், வரலாற்றையும் ஒரு சேரப் புரிந்து கொள்வதனூடாகவே அந்தப் புரிதலுக்கு வந்து சேர முடியும்.
1977 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விராஜ் தனது இறுதிக்காலம் வரை சோர்வின்றி தொடர்ந்து இயங்கினார்.
1977 இன் பிற்பகுதிகளில் மேற்குலக அரச பயங்கரவாதத்திற்கு இலக்காகி அதற்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களின் உலகளாவிய ஒரு குறியீடாகவே அவர் மாறியிருந்தார். இதன் விளைவாக ஈழப் போராட்டம் என்றில்லாமல் பாலஸ்தீனம், மியான்மர் என்று அவரது தோழமை பரந்திருந்திருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொருத்தவரை சங்கர், சீலன், கிட்டு மில்லர், திலீபன், பூபதியம்மா தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை பல்வேறு தனி மனித ஆளுமைகளை வைத்து அந்தந்த கால வரலாறுகளை நாம் இயல்பாகப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த மாவீரர்களைப் போலவே 2009 இலிருந்து அவர் மரணிக்கும் இந்தக் காலம் வரை எமது போராட்டத்தின் எதிர்ப்பரசியலின் ஒரு காலகட்டக் குறியீடாக அவர் இருக்கிறார்.
மறுவளமாக இந்த இனத்தின் தோல்வி உளவியலில் பிறந்த இணக்க, அடிபணிவு, சரணாகதி அரசியலின் ஒரு துயர் மிகுந்த வரலாறாகவும் இந்தக் கால கட்டம் இருக்கிறது.
'போராட்டம் என்பது தொடர்ந்து போராடுவது' இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
குறிப்பாக உலக அரச பயங்கரவாத ஒழுங்கின் பின்னணியில் வைத்து 2009 ஐ போராட்டத்தின் வெற்றியாகவே அவர் பார்த்தார்.
அதனால் தான் அவரால் தொடர்ந்து இயங்க முடிந்தது.
'சம தரப்பு அங்கீகாரத்துடன் பேச்சு மேசைக்கு வந்த தவிபுலிகள் மீது மேற்குலகம் விதித்த தடைதான் தமிழின அழிப்புக்கு வழி கோலியது. எனவே முதல் குற்றவாளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தான்' என்பதைத் தொடர்ந்து பதிவு செய்தவர் விராஜ் மென்டிஸ்.
அத்தோடு நிற்காமல் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்து தவிபுலிகள் மீதான தடையை நீக்குவதுதான் தமிழின அழிப்புக்கான நீதியின் முதற்படி என்பதில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடியவர் விராஜ்.
2009 இற்குப் பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலி நீக்க அரசியல் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட புலிகளை ஆதரித்தவர்கள் கூட தோல்வி உளவியலின் பிரகாரம் புலிகள் இனி ஒரு முதன்மைச் சக்தி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அதை மறுதலித்து என்றுமே தமிழீழ விடுதலையின் மைய அச்சு புலிகள் தான் - குறிப்பாக தலைவர் தான் என்பதில் தெளிவாக இருந்தவர் விராஜ்.
நந்திக்கடல் கோட்பாடுகளை நாம் உருவாக்கும் போது விராஜ் எமது வட்டத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் பின் நாட்களில் அவரது பார்வையும், கருத்துக்களும் எமது ஆய்வின் முடிவுகளுடன் வந்து ஒரு புள்ளியில் சந்தித்தது.
ஒரு கட்டத்தில் எமது கோட்பாடுகளை சரி செய்யவும், விரிவாக்கம் செய்யவும், அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் எமக்கு ஒரு ஆசானாகவும் - பாலமாகவும் இருந்தார் விராஜ்.
தலைவர் பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் .
அவர் குறித்துப் பேச எழுத நிறையவே உள்ளது. நிச்சயம் பேச வேண்டும் - எழுத வேண்டும். 2009 இற்குப் பிறகு தடம் புரண்டு போன தமிழர்கள் பலர் வெட்கித் தலை குனியும் வரலாறு அது.
இது நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி மட்டுமல்ல அவரது அரசியலை முன்னெடுத்துச் செல்லும் அரசியற் செயற்பாடுமாகும்.
ஆனால் அவரது இழப்பிலிருந்து மீள முடியாதுள்ள எம்மால் தொடர்ந்து எழுதமுடியவில்லை.
வரும் காலத்தில் அதை முழுமையாகப் பதிவு செய்து வரலாற்றில் ஆவணப்படுத்துவோம்.
பரணி