ஒரு நாட்டின் வளர்ச்சியை அந்த நாட்டின் சாதாரண குடும்பத்தின் சமயலறையில் தெரிந்து கொள்ளலாம்! - நிலாந்தன்
மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்கள் நாளாந்தம் தங்களது வயிற்றுப் பசியை போக்குவதற்கா போராடி வருகின்றனர்.

ஒரு நாட்டின் வளர்ச்சியை அந்த நாட்டின் சாதாரண குடும்பம் ஒன்றின் சமயலறையை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும் என ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிள்ளையாரடி வட்டாரத்தில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தொழிலை ஊக்குவிப்பதற்கான உதவிகளை செய்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் செங்கலடி பிள்ளையாரடி வட்டாரத்தில் கணவனை இழந்து மிகவும் வறுமையில் உள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு காலை, மாலை உணவு தயாரித்து விற்பனை செய்வதற்கான மூலப்பொருட்களை வழங்கியுள்ளோம்.
உண்மையில் ஒரு நாட்டின் வளர்ச்சியை அந்த நாட்டின் சாதாரண குடும்பத்தில் உள்ள சமயலறையை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இங்கு பல சமயலறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதோடு நாளாந்தம் தங்களது வயிற்றுப் பசியை போக்குவதற்கா போராடி வருகின்றனர். அவர்களது சமயலறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் செய்யும் தொழிலை ஊக்குவிப்பதற்கான உதவிகளை நாம் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக செய்து வருகின்றோம்.
இதற்கான நிதி உதவிகளை சிவபதி அறக்கட்டளை நிலையம் வழங்கி வருகிறது.
இன்றுடன் நான்கு பேருக்கான உதவிகளை வழங்கி உள்ளோம். இதேபோல் எதிர்வரும் மாதம் மேலும் நான்கு பேருக்கான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம். மேற்படி உதவிகளை வழங்குவதற்கான நிதி உதவிகளை வழங்கிய சிவபதி அறக்கட்டளை நிலையத்தினருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
இதன் போது இருபத்தைந்தாயிரம் ரூபாய் (25,000/-) பெறுமதியான உணவு தயாரிப்பதற்கான மூலதன பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் த.தரசன், பொருளாளர் கு.சுபோஜன் மற்றும் உறுப்பினர் அ.ஜெயராஜ் மற்றும் பிள்ளையாரடி வட்டார சமூக சேவகர் மோகன் ஆகியோர் கலந்து பொருட்களை வழங்கி வைத்தனர். https://youtu.be/8UyIES-VL_s