கூட்டு பாலியல் வன் புனர்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
வடமராட்சி கரணவாய் பகுதி சேர்ந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கூட்டு பாலியல் வன் புனர்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.
சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் பெண் ஒருவரை தொலைபேசி மூலம் அழைத்து அவரை கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 8 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் உத்திரவிட்டார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் 18ஆம் தேதி இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கரணவாய் பகுதி சேர்ந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டடிருந்தது.
தொலைபேசி மூலம் அழைப்பினை எடுத்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை 750 ஆம் இலக்க பேருந்தில் நீர்வேலி பகுதிக்கு வரவழைத்து, பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றுக்குள் அழைத்து சென்று 12 நபர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணுக்கு போதை மாத்திரைகள் வழங்கி அவரை இளைஞர்கள் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
ஏனைய 10 சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.