ஈழத் தமிழர்களின் உண்மைக்கான போராட்டம் ! செம்மணி புதைகுழியும் அதற்கு அப்பாலும் ,
"செம்மணி: மறுப்பின் சின்னம்", 1998 ஆம்ஆண்டு நீதித்துறைக்கு வழங்கப்பட்ட சாட்சியங்களின்படி செம்மணி புதைகுழி 300-400 தமிழர்கள் கொல்லப்பட்ட மனிதப் புதைகுழிகளின் தளமாகும்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சர்வதேச காணாமல்போனோர் தினத்தைக் குறிக்கும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) "செம்மணி மற்றும் அதற்கு அப்பால்: மனிதப்புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் மற்றும் உண்மைக்கான தமிழர்போராட்டம்" கையேட்டை வெளியிட்டது. இந்தக் கையேட்டில் குறப்பிடப்பட்டுள்ள செம்மணி, மன்னார் புதைகுழிகள், சிறிலங்காவில் உள்ள பல மனிதப்புதைகுழிகளின் ஒரு சில மட்டுமே என்று குறிப்பிடுகின்றது. இப் புதைகுழிகளில் 60,000 முதல் 100,000 வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த சிறிலங்கா அரசாங்கங்களின்ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறது. இக் கையேட்டில் அடிக்குறிப்புகளும்(foot notes)படங்களும் உள்ளன.
மனித உரிமை ஆணையாளர்.(UNHCHR) வோல்கர்டர்க்கின் (Volker Turk)
சிறிலங்காவிற்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கு சென்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களையும் சந்தித்தார். இச் சந்திப்பின்போது செம்மணிப்புதைகுழி “துயர் படிந்த கடந்தகாலத்தை புலப்படுத்துகின்றது” என்று வேதனையுடன் அறிவித்தார்.
உயர் ஆணையாளரின் செம்மணி வருகையும், இப் புதைகுழிகளின் கொடூரங்களையும் கவனத்தில் கொண்டு அவர் கூறிய வார்த்தைகளும்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் மனம் வருந்தி கூறிய கூற்றும்,
“சர்வதேச காணாமல் போனோர் தினமானஆகஸ்ட் 30, 2025"-க்கு ஒரு பொருத்தமான முன்னுரையாகவும் அமைந்தது.
"செம்மணி: மறுப்பின் சின்னம்", 1998 ஆம்ஆண்டு நீதித்துறைக்கு வழங்கப்பட்ட சாட்சியங்களின்படி செம்மணி புதைகுழி 300-400 தமிழர்கள் கொல்லப்பட்ட மனிதப் புதைகுழிகளின் தளமாகும். அகழ்வாராய்ச்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவதற்கு முன்புகண்கள் கட்டப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியபோது, விசாரணைகள் திடீரென நிறுத்தப்பட்டன. ஆகஸ்ட் 2025 இல் அதேஇடத்தில் 200 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும், UNHCHR வோல்கர்டர்க்கின் வருகையும் உண்மையை வெளிப்படுத்தும் என்ற நம்ம்பிக்கையை அளித்துள்ளன.
"மன்னார்: மூடிமறைப்பின் ஒரு வடிவம்", அதிக எண்ணிக்கையிலான எலும்புக்கூடுகள் மீதான விசாரணைகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, இரண்டு மனிதப்புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 க்கும் மேற்பட்டவை, நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வாராய்ச்சிகளுக்கு வழிவகுத்த அதிகாரிகளின் முரண்பாடான கூற்றுக்களால் திசைதிருப்பப்பட்டு குறைமதிப்பிடப்பட்டதால் காலவரையரையின்றி நிறுத்தி வைக்கப்படவேண்டியதாயிற்று
இக் கையேடு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றது. DNA ஐ அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்பதற்குமான நிபுணத்துவத்திற்கு சர்வதேச விசாரணை வழிவகுக்கும் என்றும் நீண்ட காலமாக துன்பப்படும் தமிழ்குடும்பங்களினதும்,பல தசாப்தங்களாக காணாமல் போன தங்கள்அன்புக்குரியவர்களைத் தேடும் உறவினர்களின் முயற்சிக்கும், மற்றும் உண்மை, பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றிற்கும் சர்வதேச விசாரணை வழி வகுக்கும் என முடிக்கின்றது