பொலிஸ் சேவையை சுதந்திரமான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஹரிணி அமரசூரிய .
.

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது பொலிஸ் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார்.
இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சச்சித்ரா ஜெயகாந்தன், சிறந்த வீரர்களான டி.ஜி.எஸ். விஜேதுங்க, A.M.N. பெரேரா, P.P. ஹேமந்த ஆகிய வீரர்களுக்கும், ஒட்டுமொத்தப் போட்டியின் பிரதமரின் சவால் கேடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான ஜனாதிபதியின் சவால் கேடயத்தை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைக்கும் பிரதமர் வழங்கிவைத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
விளையாட்டு என்பது, பங்கேற்றல் மற்றும் வெற்றி ஈட்டுதல் மாத்திரமல்ல, ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் புத்திசாலித்தனமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாகும். வெற்றி புகழையும், நன்மதிப்பையும் பெற்று தருகின்ற அதேவேளை பங்கேற்றல் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கி, ஒழுக்கமான, வலிமையான ஆளுமையும் சிறந்த மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகின்றது.