Breaking News
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.