ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டி
கொனீபா மகளிர் உலகக்கிண்ணம் 2024 இறுதியாட்டம் 08.06.24 சனிக்கிழமை பிற்பகல் 14.00மணிக்கு

இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எங்களை மாதிரி போராடிக்கொண்டிருக்கும் இனங்களைச் சேர்ந்த 6 நாடுகள் தெரிவாகியிருந்தன இதில் மூன்று நாடுகள் பொருளாதாரம், விசா எடுப்பதில் இருந்த சிக்கல்கள் காரணமாக இறுதி நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எங்களுக்கும் கிட்டத்தட்ட 45,000 ஆயிரம் யூரோக்கள் (இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 1.45 கோடி) செலவு.தற்போது மூன்று அணிகளும் ஒருவருக்கொருவர் இரண்டு தடவை விளையாடி புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இரண்டாம் இடங்களைப்பெறும் அணிகள் சனிக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் விளையாடுவார்கள். நாங்கள் தற்பொழுது மூன்று ஆட்டங்களில் விளையாடி ஒன்று வெற்றி ஒன்று சமநிலை
இன்னொன்று தோல்வியென நான்கு புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தில் நிக்கிறோம்.
MATCH1
Tamil Eelam vs Székely Land
2:2
2x S.Dilaxsika
Match 2
Tamil Eelam vs Sápmi
0:2
Match 3
Tamil Eelam vs Székely Land
1:0
1x S.Dayaniah
இன்று நான்காவது ஆட்டம் 23.00
Tamilelam vs Sapmi
ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி. CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது. இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில்
ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல ஆண்டுகளாக கணிக்கப்படுகிறார்கள்.
CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் இருக்கும். இந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறோம்
தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற மிகைத்திறமையான எம் தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றார்கள். தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்கள் அணியை மெருகேற்றி வழிநடத்துகின்றார்கள்.இவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நோர்வே ஒஸ்லோவில் பயிற்சிகளை வழங்கி தற்போது BODO இல் நடைபெறவிருக்கும் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெறுவதற்கு தயாராகிவிட்டோம்.
பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால் உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும அணிதிரளுமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம். இந்த வரலாற்று பயணத்தில் தங்களையும் இணைந்து கொண்டு எமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதார சுமையில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டுகிறோம். தங்களது சிறிய பங்களிப்பு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். எனவே எமது இந்த முயற்சிக்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கி ஊக்குவிக்குமாறு உரிமையுடன் வேண்டுகிறோம். உங்கள் பங்களிப்பினை வழங்க எமது இணையத்தளத்தின் அன்பளிப்பு பொத்தானை அழுத்தவும்.
https://tamileelamfa.net/donate/ அல்லது சுவிஸில் இருந்து அன்பளிப்பு வழங்க விரும்புவோர் பின்வரும் இலக்கத்திற்கு Twint பண்ணலாம்
Twint – Wikipedia மதி - 076 323 49 48 - திருக்குமார் - 078 670 09 44- ஊடகப்பிரிவு
தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம், 01.06.2024.
https://www.youtube.com/watch?v=E0IJ1sNCbjU
பூவையர் எல்லாம் பூவினர்
ஆதலால் பூப்பந்து ஒன்றே
அவர்தம் மென்மைக்குள் அடக்கமென
அடக்கிக் கிடந்த மரபுகள் உடைபட
பூவையரெல்லாம் புலியினர்
புண்ணிய தேசத்தின் வீசும் புயலெனப்
புறப்பட்டு, கால்ப்பந்தும் விளையாடும்
கதாநாயகிகள் எனக் கம்பீர நடைநட!
யாரது யாரது என்றாங்கே அனைவரும்
திகைத்திடப் ‘பாரதி’ கனவு கண்ட
புதுமை மகளிரெனப் புயலாய்ச் சீறும்
பாரது போற்றும் பிரபாகரப்பெண்கள்!
தங்கையர் வாழீர்! ஈழ நங்கையர் வாழீர்!
தேசம் போற்றிப் பெருமிதம்கொள்ளும்
மங்கையர் வாழீர்! மாண்புடன் உங்கள்
மனங்களில் என்றும் மாவீரம் வாழ
வனிதையர் நீர் வரலாறாய் வாழ்வீர்!
-காந்தள்-