Breaking News
திரையில் நாடந்த காவியம் அல்ல எங்கள் ஈழத் தரையில் நடந்த வரலாறுகள்!
ஈழத் தமிழர் வரலாற்றை எள்ளி நகையாடும் இனத் துரோகிகளுக்கு இது சமர்ப்பணம்.

இந்த உலகத்தில் ஒரு தந்தை தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்,
விளையாட அழைத்துச் செல்வார்,
படிப்பு முடிந்ததும் வேலைக்கு அழைத்துச் செல்வார்,
மிக மகிழ்ச்சியாக மணமேடைக்கு அழைத்துச் செல்வார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் மகளை பார்த்து பூரித்துப் போவார்.
இங்கே வரலாறே வேறு! ஈழத்து தகப்பன் தன் மகளை எவ்வளவு அருமையாக இன விடுதலைக் களத்திற்கு இன்முகத்தோடு அழைத்துச் சொல்லுகிறார்.
இவ்வளவு பெருமைகள் இருப்பதால் தான் அனு தினமும் ஈழ நிலத்தின் வீர வரலாற்றை நாங்கள் பெருமையோடு பேசுகின்றோம்.
அதன் வாயிலாக அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தின் விடுதலை எனும் லட்சியம் பிறக்கும் என்றும் நம்புகின்றாம்.
இது திரையில் நாடந்த காவியம் அல்ல.
எங்கள் ஈழத் தரையில் நடந்த வரலாறுகள்.
ஈழத் தமிழர் வரலாற்றை பேசுவதை எள்ளி நகையாடும் எங்கள் இனத்தின் துரோகிகளுக்கு இது சமர்ப்பணம்.
இன்று ஈழத் தமிழர் வரலாற்றை கொச்சைப் படுத்துவதும் திரிபுபடுத்துவதும் என எதிரிகளின் வேண்டுதலுக்கு, துரோகிகள் திரைப்படமெடுப்பதும் காட்சியமைப்பதுமாக திரைப்படம் என்னும் போர்வைக்குள் தமது வன்மத்தை புகுத்திவருகின்றனர்.