யாழில் பாடசாலை மாணவியர் மீது ஆசிரியர்கள் முறையற்ற நடத்தை – வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றோர்கள் முறைப்பாடு
.
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடிதம் மூலம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண்பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று விசாரிப்பது, முறையற்ற தொடுகைகளில் ஈடுபட்டது என பெற்றோர்கள் முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்த பிள்ளைகள் பாரிய மன உளைச்சலை சந்தித்திருப்பதுடன் பாடசாலைக்குச் செல்ல மறுக்கின்றனர்.
இச்சம்பவத்தினை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளருக்கு தெரியப்படுத்தி அவரையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்று அதிபருக்கு தெரியப்படுத்தினோம்.
அன்றைய தினம் ஆசிரியர் ஒருவரினால் றீப்பை தடியினால் அந்தப் பிள்ளைகள் தாக்கப்பட்டு, அதனால் காயங