ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் மஹேல மற்றும் நாமல் ராஜபக்ச
.

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது, இதில் உலகெங்கிலும் உள்ள சில பெரிய பிரபலங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஹொலிவுட் பிரபலங்கள், உலக வணிகத் தலைவர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிறைந்த விருந்தினரின் பங்குபற்றுதலுடன் ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன .
அம்பானி குடும்பத்தின் கூட்டமைப்பிற்குச் சொந்தமான 16,000 திறன் கொண்ட மாநாட்டு மையத்தில் உலகின் பணக்காரர்களும் பிரபலங்களும் தம்பதியரை வாழ்த்தி மரியாதை செலுத்தும் ஆசீர்வாத விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது . இதில் இலங்கையிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.