சுதந்திர போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு ; செங்கொடி இயக்கத்தின் பெருமைமிகு அடையாளம்!
.

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டீசாருக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் எளிமையையும் அஹிம்சையையும் முன்வைத்த போது, கம்யூனிச இயக்கம் எளிமையையும், எதிர்கொள்ளலையும் முன்வைத்தது.
அந்நியப் பேயாட்சியை எதிர்கொள்ளல் என்கிற அரசியல் முடிவு இந்த நிலமெங்கும் கம்யூனிஸ்ட்டுகளின் குருதிக் கொண்டு விடுதலை உணர்வை செழிப்புற வைத்தது.
அந்த அரசியல் யுகத்தின் அடையாளமாய் விடுதலைத் தழும்பும், தியாகச் செறிவும், சூடித் திகழும் சுடராய் ஒளிவீசும் அன்புத்தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு துவங்குகிறது.
செங்கொடி இயக்கத்தின் பெருமைமிகு அடையாளத்தை கொண்டாடிக் களிப்போம். எம் இயக்கம் ஈந்த தமிழகத்தின் நிகரற்ற பெருந்தலைவனை போற்றி வணங்குவோம். என சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.