மீண்டும் பிரதமராக ருத்ரகுமாரன் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம்.
தாயகம் , தேசியம், அரசியல்இறைமை என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேச அரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசுக்கு சவாலாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் திரு.விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை சிங்கள பேரினவாதத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயகம் , தேசியம், அரசியல்இறைமை என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேச அரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு அமெரிகாவில் நியு யோர்க்கில் இடம்பெற்று வருகின்றது.
மூன்று நாள் அரசவை அமர்வாக இடம்பெறும் இந்நிகழ்வின் முதன்நாளான மே 17ம் நாள் வெள்ளிக்கிழமை, அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர், பிரதமருக்கான தேர்வு இடம்பெற்றிருந்தது.
புலம்பெயர் நாடுகளில் இருந்து நேரடியாகவும், இணைவழியாகவும் இணைந்திருந்த அரசவை உறுப்பினர்கள், ஏகமானதாக இப்பொறுப்புகுரியர்களை தேர்வு செய்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்துள்ளதோடு, 2009க்கு ஆண்டு தமிழின அழிப்புக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை சர்வதேச ஜனநாயக அரசியல் வெளியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் திரு.ருத்ரகுமாரன் அவர்களை, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்திருந்தனர்.
அவைத்தலைவராக முன்னாள் உதவி அவைத்தலைவராக இருந்த கலையழகன் கார்த்திகேசு அவர்களும், உதவி அவைத்தலைவராக கௌசலா விஜிதரன் அவர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்தியப் பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில் இந்தியாவில் தேர்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை,சிறிலங்காவிலும் அதிபர் தேர்தல் இடம்பெறுவதற்கான அறிவித்தல் வர இருக்கின்ற நிலையில், இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டில் தமிழீழம் என்ற கொள்கையோடு முன்நகர்ந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பலம்பெற்று வருகின்றமை சிறிலங்கா அரசுக்கு சவாலாகவுள்ளதென அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்