மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம்! மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இன்று மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் இலங்கைஉள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதேவேளை இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்ட போதிலும் 8 ஆவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது.
காசாமீது கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சு, வைத்தியசாலைகள் குண்டு வைப்பு, பெண்கள் சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் பலி, லெபனான் மீது படையெடுப்பு, சிரியா மீது படையெடுப்பு, அவ்வப்போது அருகில் உள்ள நாடுகள் மீது அத்துமீறிய விமான குண்டுத் தாக்குதல். இப்படி பலவற்றை செய்து ஐ நாவால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, ஐ நாவால் மனித உரிமை மீறலென, போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னரும், மகிழ்ச்சியான நாடு என்னும் பட்டியலில் இஸ்ரேல் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது வியப்புக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகும்.
மேலும் 147 ஆவது இடத்தில் தற்போது தாலிபான்களின் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது.
இதேவேளை இலங்கை 128ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.