Breaking News
கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா!
,

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழாவானது இன்றையதினம் நடைபெற்றது.
காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணானந்தம் விஜயேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து சிறப்பித்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இதில் காரைநகர் பிரதேச சபையினர், விருந்தினர்கள்பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.