Breaking News
மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை.
மலேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை மீள அனுப்பும் திட்டம்.

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை.
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 1,732 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் தலையீட்டின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதிவரை மலேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை மீள அனுப்பும் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பவுள்ள குழுவில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் 124 புலம்பெயர்ந்தோரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.