தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம்
கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு! ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் .

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது.
இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன்.
கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது.