Breaking News
கட்சிக்குள் இரு குழுக்கள். அப்படியிருக்க ஒரு குழுவின் தலைவரான சுமந்திரனை அழைத்து இவ்வாறு தான் சொல்வதாகக் கூறுமாறு சம்பந்தன்
புலனத்தின் மூலமாகவோ ,மின்னஞ்சல் மூலமாகவோ சம்பந்தன் தனது கருத்துகளை உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க முடியும். அவ்வாறு அவர் செய்யாமல் சுமந்திரனிடம் கூறினார் என்பது ஏற்புடையதாகுமா ?
10.jpeg)
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு!
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பது தான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட கடைசி விடயம் " என்று சம்பந்தன் கூறியதாகவும் இதை வருகின்ற தமிழரசுக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அனைவருக்கும் தெரியப் படுத்துமாறு சுமந்திரனிடம் சம்பந்தன் கூறியதாக மின்னல் தகவல் வெளியிட்டுள்ளது. மின்னல் அச்சமயம் சுமந்திரனுடம் சம்பந்தனின் வீட்டில் நின்றாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கட்சிக்குள் இரு குழுக்கள். அப்படியிருக்க ஒரு குழுவின் தலைவரான சுமந்திரனை அழைத்து இவ்வாறு தான் சொல்வதாகக் கூறுமாறு சம்பந்தன் கூறுவதை யார் ஏற்பார்கள்,நம்புவார்கள்.புலனத்தின் மூலமாகவோ ,மின்னஞ்சல் மூலமாகவோ சம்பந்தன் தனது கருத்துகளை உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க முடியும். அவ்வாறு அவர் செய்யாமல் சுமந்திரனிடம் கூறினார் என்பது ஏற்புடையதாகுமா ? ஆனால் அந்தப் பத்திரிகைக்காரன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கேட்டதாகத் தான் அதை எழுதியுள்ளார்.
இது உள்கட்சிப் பிரச்சினை அது போகட்டும். இங்கே உள்ளக சுயநிர்ணயம் சமஷ்டி என்று கூறும் சம்பந்தன்பதின்மூன்றை நடைமுறைப்படுத்துங்கள் என்று கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பது ஏன்? பதின்மூன்று சமஷ்டி ஆகாதே. அது முழுக்க முழுக்க ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் தானே. பதின்மூன்றை நடைமுறைப்படுத்துங்கள் என்பதன் மூலம் ஒற்றையாட்சியை ஏற்பதாகத் தானே பொருள்படும். ஏன் சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான சமஷ்டியை நடைமுறைப்படுத்துங்கள் என்று உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதவில்லை. அது மட்டுமல்ல மைத்திரி-ரணில் ஆட்சியின் பொது எக்கியராஜ்ஜே என்று ஒரு சிங்கச் சொல்லைத் தமிழுக்குள் புகுத்தி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்படுத்த முயற்சித்தது ஏன்?
கட்சிக்குள் பிளவு வழக்கு மன்றில் கட்சி நிறுத்தப் பட்டுள்ளது இவற்றைத் தீர்க்கச் சம்பந்தன் என்ன நடவடிக்கை எடுத்தாரோ தெரி யவில்லை. ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக உள்ளக சுயாட்சி,சமஷ்டி இவற்றை வைத்து சனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு தமது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களுடம்ன் பேசி யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கப் போகிறாராம்.