அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கியவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர்;அதிருப்தி கொண்ட குழுக்கள் புதிய அரசியல் முழக்கத்தை தேட முயற்சிக்கின்றனர்
அரசியல் கட்சிகள் பல்வேறு கோசங்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் தாயகம் ஐக்கிய தேசியக் கட்சி?; இலங்கை வரலாற்றில் சிறப்புமிக்க மக்கள் ஆணை ஜனாதிபதிக்கு.
காலி உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கியவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர். அதனால்தான் அரசியல் கட்சிகள் பல்வேறு கோசங்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பில் முழு நாட்டு மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசியல் ரீதியாக பலவீனமான மற்றும் அதிருப்தி கொண்ட குழுக்கள் புதிய அரசியல் முழக்கத்தை தேட முயற்சிக்கின்றனர்” என வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தின் தாயகம் ஐக்கிய தேசியக் கட்சி
இதேவேளை,ஜனநாயகத்தின் தாயகம் ஐக்கிய தேசியக் கட்சி எனவும் ஜனநாயகம் பற்றி தமக்கு எவரும் பாடம் புகட்ட வேண்டிய அவசியம் இல்லையெனவும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்;
“ஜனநாயகத்தை அதிகம் மதிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியும், தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் உலகலாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் செயற்படாது என்பது ஊரறியும், உலகறியும் விடயமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேசுபொருளான பாலித ரங்கே பண்டார
இதனிடையே நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்திருந்தார்.
அவ்வாறானதொரு பட்சத்தில் அது தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து கருத்துக்கணிப்பை நடத்தும் யோசனையை முன்வைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்து வெளியிட்டனர்.
மேலும் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாலித ரங்கே பண்டார தனது கருத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“எமது கட்சியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்ட கருத்தை ஆழமாக ஆராயாமல் இவ்வாறு அறிவிப்புகளை விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது.
நாட்டு மக்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் மேலதிக சுமை தேவையில்லை, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்ட பின்னர், சுதந்திரமான சூழலில் தேர்தலை நடத்துவதே ஜனநாயக பண்பு என்ற தொனியிலேயே அவர் கருத்தை வெளியிட்டிருந்தார். இது ஒரு கோரிக்கை மாத்திரமே, மாறாக அரசின் தீர்மானம் அல்ல.
நெருக்கடிக்கு மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் எவ்வாறு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியும் என்பதே அவரின் வாதமாகும். அவரின் கருத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை.
எது எப்படி இருந்தாலும் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.