துஷ்பிரயோகத்தால் சிறுமி உயிரிழப்பு; கொந்தளிக்கும் மக்கள்
சிறுமியின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்ததால் சீற்றமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்ற சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளார். சகோதரியின் கணவரான 18 வயது நபரையும் அவரது குடும்பத்தவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வன்முறைக்குள்ளான சிறுமி மரணம்.
வன்முறைக்குள்ளான சிறுமிக்கு மூன்று தடவை மாரடைப்பு ஏற்பட்டது இரண்டு தடவை நிலைமையை சரி செய்தோம் மூன்றாவது தடவை ஒன்றும் செய்ய முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 8ம் திகதி தலைநகர் டாக்காவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிப்பட்டு ஆறு நாட்கள் உயிருக்கான போராடிய சிறுமி நேற்று உயிரிழந்தார். மகுராவிற்கு இராணுவ ஹெலிக்கொப்டரில் சிறுமியின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் கடும் ஆர்பாட்டங்களின் மத்தியில் அது தரையிறங்கியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். சிறுமியின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். டாக்கா பல்கலைகழகத்திலும் இறுதிநிகழ்வு போன்ற ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாணவிகள் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற பின்னர் உரையாற்றியுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் பாதுகாப்பை கோரியுள்ளனர்.பங்களாதேஸ் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்னவென்பது குறித்த தெளிவற்ற தன்மை காணப்படுவதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் இது குறித்த தெளிவான விளக்கம் அவசியம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.