தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்கும் தானே காரணம் என உண்மைக்கு புறம்பாக கூவும் கருணா!
கருணா போல் 1000 துரோகிகள் வந்தாலும் நாங்கள் எப்போதும் தேசியத் தலைவருக்காக நிற்போம்!

தமிழ் மக்கள் ஒன்றியம் என்னும் பெயரில் வெளிவந்த செய்தி கூறுவது!
கருணா போல் 1000 துரோகிகள் வந்தாலும் நாங்கள் எப்போதும் தேசியத் தலைவருக்காக நிற்போம்!
தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என்றும் தற்போதைய நிலையில் விடுதலைபு புலிகள் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பத்திற்கு வித்திடவர் தான் என்றும் இப்படி பலவாறாக உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார். இந்த வேளையிலே கருணா கூறும் பொய்யான பல தகவல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுதல் பொருத்தமானதாக இருக்கும்.
1977ற்குப் பிந்திய காலங்களிலே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டவர் யோகன் பாதர் அவர்கள். அவர் தேசியத் தலைவரை நேராகச் சென்று சந்தித்து அதற்கான திட்டங்களை துவக்கினார். அதன் பின்னர் மட்டக்களப்பில் பல தளபதிகள் பணியாற்றினார்கள். தளபதி காக்கஇ தளபதி அருணாஇ தளபதி குமரப்பா எனப்பலர் கிழக்கில் தளபதிகளாக இருந்தது மட்டுமல்லஇ விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டார்கள்.
அதன் பின்னர்தான் 1983ல் கருணா இணைந்து கொண்டு இந்தியாவில் 3வது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட போராளிகளே அதிகம் வீரச்சாவடைந்ததாக கருணா கூறுகின்றார். விடுதலைப் புலிகள் மாவீரர் நாளில் வெளியிடும் தரவுகளை உற்றுநோக்கினால்இ யாழ். மாவட்டத்திலேயே அதிகமான போராளிகள் வீரச் சாவடைந்துள்ளார்கள் என்பது சாதாரணமான ஒருவருக்குப் புரியும். தளபதியாக இருந்த கருணாவுக்கு தரவுகள் கூட தெரியாதுபோலுள்ளதுஅப்போதும் சரிஇ இப்போதும் சரி அனைத்து போராளிகளுமே தமிழீழக் கனவுடன் மரணித்தவர்கள் என்பது கருணாவுக்கு தெரியாத ஒன்றல்ல.
கருணாவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு களமாடி மடிந்த மாவீரர்களின் கனவுகள் நனவாக கருணா என்ன செய்யப்போகின்றார்? ஆனால்இ இன்று அவர் சிங்கள அரியணையின் விசுவாசியாக மாறி அந்த மாவீரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு துரோகியாக மாறிவிட்டார்.
அத்தோடுஇ தமிழீழ விடுதலை போரின் அந்தரங்கங்கள் எல்லாவற்றையுமே சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்த கருணா கிழக்கு மக்களை வைத்து இப்போது போடும் நாடகத்தில் கதாநாயகன் பாத்திரம் எடுத்துக்கொண்டுள்ளார். இன்று கருணா 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகையின் அடிப்படையின் மாகாண சபை அதிகாரம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக கிடைத்தால் போதுமானது என்று கூறுகின்றார்.
இதற்காகவா தமிழரின் விடுதலைப் போர் இவ்வளவு இழப்புக்களையும் சோதனைகளையும் தாண்டிவந்துள்ளது. சிங்களத்தின் அதிகாரப்பரவலாக்கம் என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையென்பது கருணாவக்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தும் சிங்களத்தின் விசுவாசியாக இருப்பதற்கு கருணா கூறுபவைகள் கொஞ்சம் அதிகமானதுதான். தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல வெற்றிகளைச் சாதித்ததாகவும், பல வெற்றிகளுக்குப்பின்னணியில் இருந்ததாகவும் கருணா கூறுகின்றார்.
கருணா அப்படி கூறும் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட ஒரு கருணாவை காரணமாக சொல்லமுடியாது. தமிழீழ விடுதலை போரின் ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் முகம் தெரியாத பல இருக்கின்றார்கள். பலரின் வியர்வையும் குருதியும் சிந்தப்பட்டுள்ளது. கருணாவின் உதவிகள் இல்லாமல் ஓயாத அலை-1, மாங்குளம், கொக்காவில் தாக்குதல், சூரியகதிர், யாழ்தேவி முறியடிப்பச்சமர்கள் போன்ற சமர்களிலே புலிகள் வரலாற்று வெற்றிகளை சாதித்தார்கள் என்பது கருணாவுக்கு மீண்டும் ஒருதடவை ஞாபகமூட்டுவோம்
உரிமை கேட்டு 21 வருடங்கள் புலிகள் அமைப்பிலிருந்து போராடிய கருணா இன்று கிழக்கு மக்களை சிங்கள தேசத்திடம் அடகுவைத்துஇ தானும் தனது நண்பர்களும் சிங்களத்தின் நடாளுமன்றத்தை அலங்கரிப்பதோடு கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகின்றார்களாம். விடுதலைப் புலிகளை அழிக்கப்போகின்றோம், விரைவில் அழித்தவிடுவோம் என சிங்களம் தொண்டை கிழிய கத்திவரும் வேளையில் சிங்களம் ஒருவேளை விடுதலை புலிகளை அழித்துவிட்டால் கருணா செல்லாக்காசாகிவிடுவார் என்பதனை இந்த இடத்தில் ஞாபகமூட்டுகின்றறோம்
விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கும் வரைக்குமே கருணா என்கின்ற துரோகிக்கு சிங்களம் முக்கியத்துவம் கொடுக்கும். அதன் பின்னர் அவர் நாய்க்கும் கேவலமான ஒரு நிலைக்கு வருவார் என்பது இன்று ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் விளங்கும் வேளையில் கருணா மட்டும் புரிந்துகொள்ள மறுப்பது வேதனை தருகின்றது. அடுத்துவரப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலினை குறிவைத்திருக்கும் கருணா ஒட்டு மொத்த தென் தமிழீழ மக்களின் வாக்குகளையும் சூறையாடி சிங்கள அரசுக்கு அர்ப்பணித்து தானும் தனது சகாக்களும் சுகபோக வாழ்வு வாழ பெரும்திட்டம் தீட்டியுள்ளமை அவரது நேர்காணலில் மூலம் தெரிகின்றது.
தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டிய நேரமிது. அவ்வாறு இருப்பதன் மூலம் துரோகிகளை வரலாற்றில் இருந்து துடைத்தெறியமுடியும்.
தமிழ் மக்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு மாவட்டம்