Breaking News
டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு தற்போது ராமலிங்கம் சந்திரசேகரிடம்!
.

டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு தற்போது ராமலிங்கம் சந்திரசேகரிடம்!
தேசிய மக்கள் சக்தியின் 21 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடற்றொழில் நீரியல் வள, மற்றும் கடல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் கலாச்சார வேட்டி மேற்சட்டையோடு பாராளுமன்றம் சென்று தமிழில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சரோஜினி சாவித்ரி போல்ராஜக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுராவின் கீழ் பாதுகாப்பு, நிதி - திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி, டிஜிற்றல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் செயற்படும். புதிய பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சை பொறுப்பேற்றுள்ளார். விஜித ஹேரத் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சுற்றுலாத்துறை அமைச்சை ஏற்றுக்கொண்டுள்ளார். தங்களுடைய ஆட்சியில் அமைச்சரவை 25யைத் தாண்டாது என மக்களுக்கு உறுதியளித்தபடி 21 அமைச்சுப் பொறுப்புக்களே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் நிதி வீண்விரயம் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எங்களுக்கு மட்டற்ற அதிகாரத்தைத் தந்துள்ளார்கள். அதனைத் துஸ்பிரயோகம் செய்யாமல் பொறுப்பான முறையில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தன்னுடைய அமைச்சரவையில் உரையாற்றும் போது ஜனாதிபதி அனுரா குறிப்பிட்டுள்ளார்.