பு லி க ளி ன் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதம்.
அருள்நிலாவின் அப்பாவும், அவளின் அக்காவும் இனியொருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

“எங்களை கட்டியடைத்து முத்தமிட்டு பிரியும்போது நீங்கள் கூறிய பல அறிவுரைகளை நான் நிறைவேற்றியதாகவே நம்புகின்றேன். உங்களை மீண்டும் காணும்போது பல வெற்றிச்செய்திகளை உங்களிடம் கூற நான் காத்திருக்கின்றேன்.. விடுதலைப்பாடல்களை கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவு என்னை வாட்டுகின்றது. நீங்கள் எங்களுடன் வாழ்ந்த காலங்கள் மிக்குறைவு. குறைவான இந்த நாட்களிலேயே ஒரு அழகிய வாழ்வினை நாம் வாழ்ந்தோம். ஒற்றைக்காலுடன் நீங்கள் இருந்தாலும் ஒருபோதும் உங்கள் வேகம் குறைந்ததில்லை.உங்களை அப்பாகவாக பெற்றதில் நான் மிக பெருமையடைகின்றேன்.. நீங்களும், அக்காவும் எப்போது வருவீர்கள் அப்பா??”
பு லி க ளி ன் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதத்தின் சுருக்கமே இது.. அருள்நிலாவின் அப்பாவும், அவளின் அக்காவும் இனியொருபோதும் திரும்பிவரப்போவதில்லை. கற்பனைக்கப்பாற்பட்ட வீர, ஈக சம்பவங்களால் நிறைந்துபோயிருக்கும் தமிழர்களின் போராட்டவரலாற்றைப்போன்ற ஒன்றை இந்த பூமிப்பந்து இதுவரை கண்டதில்லை. இனியொருபோதும் இவ்வாறான நிகழ்வுகள் சாத்தியமேயில்லை.மகனை, மகளை, கணவனை, மனைவியினை ஆரத்தழுவி விடைபெற்று போர்க்களம் புகுந்த வீரபுருஷர்களால் நிறைந்தது தமிழினத்தின் போரியல் வரலாறு. மகாபாரதம், இராமாயணம் போன்ற புரட்டு இதிகாசங்களை, இட்டுக்கட்டப்பட்ட காப்பியங்களை விஞ்சிய வீரவரலாறு எம் கண்முன்னே நாம் வாழ்த்த காலத்தில் நடந்தேறியிருக்கின்றது. அந்த வரலாறு எமை எழுச்சிகொள்ளச்செய்யும்.. எழுவோம் நாம்.