Breaking News
தமிழ்த் தேசிய அரிதாரம் பூசிக்கொண்டு மக்கள் அரங்குக்கு வந்திருக்கிறார்கள்.
.
சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட் குறிக்கப்பட்ட பின்பு வடக்கு கிழக்கெங்கும் தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டுக் கிளம்பியுள்ளது. 'தாங்கள் தான் தமிழ் தேசிய காவலர்கள்' என்று சொல்லிக் கொண்டு திரை மறைவில் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கும் அழிப்பதற்கும் துணை போனவர்கள் எல்லாம் மீண்டும் தமிழ்த் தேசிய அரிதாரம் பூசிக்கொண்டு மக்கள் அரங்குக்கு வந்திருக்கிறார்கள். தங்களால்தான் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் தங்களால்தான் அதற்காகக் குரல் எழுப்ப முடியும் என்று வாய் கூசாமல் பொய் உரைக்கும் இந்த நபர்களை மீண்டும் நாடாளுமன்றதுக்கு தெரிவு செய்தால் தமிழினம் அரசியல் ரீதியாக மற்றொரு முள்ளிவாய்க்காலை சந்திப்பது நிச்சயம் நடக்கும் .