Breaking News
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை; உக்ரைன் ரியாக்சன் என்ன?
.

அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.
இந்த விவாதங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்று ரஷ்யா திங்களன்று உறுதிப்படுத்தியது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக பங்கேற்பார்கள்.
அதே நேரத்தில் அமெரிக்கா சார்பாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.