Breaking News
இன்று ஜனாதிபதியிடம் பத்ம பூஷன் விருதை பெறுகிறார் நடிகர் அஜித்!
தமிழகத்தை சேர்ந்த கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கெளரவிக்கும் நோக்கில், மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை மதித்து, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று வகைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் ஜனவரி 25ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் - நடிகர் அஜித் குமார், பரதநாட்டியக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா சந்திரகுமார், மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி - ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.