பலதும் பத்தும்:- 21,04,2025 - பிள்ளையானுக்காக நாமல் ஏன் கவலைப்படுகிறார்?
மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம். -விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம். -விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர்உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது. இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் (James Webb Space Telescope) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய K2-18b, 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில்உள்ளது. கடல் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பக்றீரியாக்களின் சுவாசத்தால் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள், தெளிந்தநீருக்கான மூலக்கூறுகள் கோளைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருப்பதால், இது ஒரு நேர்மறையான அறிகுறிஎன்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடா
கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு அச் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
பிள்ளையானுக்காக நாமல் ஏன் கவலைப்படுகிறார்?
பிள்ளையானுக்காக நாமல் ஏன் கவலைப்படுகிறார்? காரணம்காலப்போக்கில் வெளிவரும் என்கிறது அரசு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை தொடர்ந்து சட்டமா அதிபரால் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சரியான சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள். இதனையடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சரியான சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள். அவ்வாறு இடம்பெறும்போது உதய கம்மன்பில, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர போன்றோர்பதற்றமடைவது தொடர்பில் எமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை - பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும்இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துரைராசா ரவிகரன்
வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார்.இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக ரவிகரன் தெரிவித்துள்ளார். இச் சந்திப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண அளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.