Breaking News
வேல்முருகன் அவர்கள் உணர்வுகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தங்கத்துரை அவர்களின் மனைவிக்காக சிவாஜிலிங்கம் அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார்.
டெலோ இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை. அவரை எல்லோரும் தங்கண்ணா என்று அழைப்பார்கள். அவரும் குட்டி மணியும் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அப்போது அந்த இருவர் குடும்பங்களுக்கும் சென்னை நந்தனம் வீட்டுத்திட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் வீடுகள் வழங்கி உதவினார். இதில் குட்டிமணியின் மனைவி பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறி சில வருடங்களுக்கு முன்னர் இறந்தும்விட்டார். ஆனால் தங்கத்துரையின் மனைவி தொடர்ந்து அக் குடியிருப்பில் வசித்து வந்தார். இப்போது தமிழக அரசு அவரை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு மாற்று வீடும் வழங்கப்படவில்லை.இந்த வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கு சென்று சிவாஜிலிங்கத்தை சந்தித்து குகன்சாப் அவருக்கு தந்த கடிதத்தை ஒப்படைத்திருக்கிறேன். இப்போது தங்கத்துரை அவர்களின் மனைவிக்காக சிவாஜிலிங்கம் அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார். வேல்முருகன் அவர்கள் உணர்வுகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தமிழக அரசு செவி சாய்க்குமா? தங்கத்துரை மனைவிக்கு உதவுமா?