பலதும் பத்தும் :- 28,03,2025 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம்.
யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுகொண்டு புதின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரசன்ன ரணவீர மனு - நீதிமன்றம் வழங்கியஉத்தரவு!
கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரிஇ முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்னரணவீர தாக்கல் செய்த மனுவை தொடரலாமாஇ வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் திகதிதீர்மானிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை இன்று (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதேநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
களனி பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை போலி பத்திரம் மூலம் விற்பனைசெய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகஇ தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக்கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபர்அடையாள அணிவகுப்பு!
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானசம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்இ மேலும் குறித்தவைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தடவைகளிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனதெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியைராஜினாமா செய்துள்ளார்.
அதன்படிஇ அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய கலாநிதி பந்துர திலீபவிதாரணஇ நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராவார்.
இருப்பினும்இ அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லைஇ மேலும் அவரைத்தொடர்பு கொள்ள அத தெரண செய்திப்பிரிவு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதற்கிடையில்இ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிறுவனங்களின்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது நபராக கலாநிதி பந்துர திலீப விதாரணகாணப்படுகிறார்.
முன்னதாகஇ இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசியபோக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ருவான் விஜயமுனி ஆகியோர் தங்கள் பதவிகளில்இருந்து ராஜினாமா செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்இ சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (27) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ். சாவகச்சேரி பகுதியில்இ சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும்இ தற்போதய வேட்பாளருமாகிய செ.மயூரன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில்இ ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்இ சுரேஸ்பிரேமச்சந்திரன்இ வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்இ சாவகச்சேரி பிரதேசசபையின் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்!
மன்னார்இ பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் ஒருவரைகடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபர் தொடர்பாக தகவல் எதுவும் தெரிந்தவர்கள் 0743022280இ 0758320499 என்ற தொலைபேசிஇலக்கத்திற்கு அறியத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு .
வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் இந்நிகழ்வு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும்இ பாராளுமன்றஉறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாநகரசபைஇ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைஇ வவுனியா வடக்கு பிரதேச சபைஇ செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில்இ கட்சியின் பொதுச் செயலாளரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்இ வேட்பாளர்கள்இ கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மாத்தறை தெவிநுவர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்தசம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். வென்னப்புவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்தது. கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது வேனில் வந்தசிலரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 28இ 29 வயதான 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கான முயற்சிகளைமேற்கொண்டுவருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்டமுடிவடைந்துள்ளதாகவும்இ புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையானது 2024இ நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி முடிவடையதிட்டமிடப்பட்டிருந்த நிலையில்இ சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைநடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
யாழில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாகயாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பின் போது கஞ்சா செடி கைப்பற்றப்பட்டதுடன்இ சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்இ சுன்னாகபொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக...
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலானசந்திப்பு இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில்இ கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக வங்கியால்செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்து நீண்டது கலந்துரையாடல்நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை இ விவசாயம்இ மீன்பிடி மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக மேலும் விரிவாக பேசப்பட்டது .