வடகொரியா பலூன்களைக் கொண்டு பலத்த பாதுகாப்புமிக்க தெற்கு எல்லை வழியாக குப்பைகளை அனுப்புகிறது என்று தென் கொரியாவின் இராணுவம் .
பலூன் பைகளில் 'அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்' இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவம் பலூன்கள் மூலம் எல்லையில் மிதக்கும் பைகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருகிறது.
வடகொரியா பலூன்களைக் கொண்டு பலத்த பாதுகாப்புமிக்க தெற்கு எல்லை வழியாக குப்பைகளை அனுப்புகிறது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கில் இருந்து அனுப்பப்பட்ட பிரச்சார துண்டு பிரசுரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா குறைந்தபட்சம் 200 குப்பைப் பொதிகள் சுமந்த பலூன்களை தென் கொரியாவின் எல்லையூடாக தென் கொரியாவிற்குள் அனுப்பியுள்ளது. தென் கொரியாவின் பாதுகாப்பு மந்திரி ஷின் வோன்-சிக் இச் செயலானது 'கற்பனைக்கு எட்டாத சிறியபுத்தி கொண்ட தரம் குறைந்த நடத்தை' என்று தெரிவித்தார், அதே நேரத்தில் இராணுவம் பலூன்கள் மூலம் எல்லையில் மிதக்கும் பைகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருகிறது.
பலூன்கள் குறித்து வட கொரியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை,ஆனால் துணை பாதுகாப்பு மந்திரி கிம் காங் இல், கழிவு காகிதம் மற்றும் அழுக்குகள் எல்லையில் அனுப்பப்படும் என்று எச்சரித்தார். தென் கொரியாவின் இராணுவம், பலூன்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளது. அவற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு செய்தி நிறுவனமான யோன்ஹாப் மூலம் தெரிவித்துள்ளது.தென் கொரிய தலைநகரில் உள்ள மக்கள் 'சியோலுக்கு அருகிலுள்ள வானத்தில் காணப்படும்'பலூன்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறும்இ அவை 'இராணுவத்தால் கையாளப்படுகின்றன' எனத் தெரிவிக்குமாறும் ஒரு பொதுச் செய்தி அறிவிக்கப் பட்டுள்ளது. ஏனைய பிராந்திய அரசாங்கங்களும் இதே போன்ற செய்திகளை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சியோல் நகர் மற்றும் எல்லைப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரும் 'வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று மாகாண அதிகாரிகளிடமிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.'அடையாளம் தெரியாத பொருளை' கண்டால்இ அருகில் உள்ள ராணுவ தளம் அல்லது காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பலூன் பைகளில் 'அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்' இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.