பிக் பாஸ் தர்ஷன் கைது.. இது சரியா? மோசமான செயல்! பாயிண்டை பிடித்து, சனம் ஷெட்டி கேட்ட கேள்வி!
விசாரணை கூட நடக்காமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் நேற்று தன்னுடைய வீட்டு முன்பு கார் நிறுத்தியது தொடர்பாக நீதிமன்ற நீதிபதியின் மகனோடு ஏற்பட்ட மோதல் காரணமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். தர்ஷன் கைது குறித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் தர்ஷன். இப்போது பல திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சென்னை முகப்பேர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருடைய வீட்டு பக்கத்தில் டீபாய் என்ற டீக்கடை இருக்கிறது. அங்கு டீ குடிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள்.
பார்க்கிங் பிரச்சனை
அப்போது தர்ஷன் ஜிம்முக்கு சென்று தன்னுடைய வீட்டிற்கு வரும்போது நீதிபதியின் மகன் தர்ஷன் வீட்டு வாசலை ஒட்டி காரை நிறுத்தியதால் தர்ஷனால் வீட்டிற்குள் போக முடியாமல் இருந்திருக்கிறது. அந்த சாலையில் அதிகமான போக்குவரத்து இருப்பதால் சாலையிலும் தன்னுடைய காரை நிறுத்த முடியாமல் தர்ஷன் 20 நிமிடங்களாக அந்த காரின் உரிமையாளர் யார் என்று தேடி அலைந்திருக்கிறார்.
போலீஸ் கம்ப்ளைன்ட்
பிறகு தன்னுடைய தம்பியை வைத்து விசாரித்த போது பக்கத்து டீக்கடையில் இருந்த நபர்கள் இது என்னுடைய கார்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு கார் நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் தர்ஷன் தன்னை அடித்து அசிங்கமாக பேசினார் என்று அவர் மீது நீதிபதியின் மகன், மருமகள், அவருடைய அம்மா மூன்று பேரும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் தர்ஷன் கைது
நீதிபதியின் மகனும் அவருடைய மாமியாரும் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்தனர். அதேபோல தர்ஷன் தரப்பிலும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்ஷன் மற்றும் அவருடைய உறவினரை போலீஸ் நேற்று கைது செய்து அவரை ஜெயிலில் அடைத்திருக்கின்றனர். இது குறித்து தர்ஷனின் முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சனம் ஷெட்டி வீடியோ
அதில் அவர் பேசுகையில் நேற்று காலையில் இருந்தே எனக்கு அதிகமான வீடியோக்களை என்னுடைய பிரண்ட்ஸ் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். அதில் பிக்பாஸ் தர்ஷன் கைது என்று இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது செய்த பாவத்திற்கு தண்டனை கிடைத்துவிட்டது என்று ஒரு நிமிடம் தோன்றியது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன்.
கைது நடவடிக்கை
ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது அதில் விசாரணை கூட நடக்காமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்து இருக்கிறார்கள். விசாரணையே திங்கட்கிழமை அன்று தான் நடக்கும். ஹாஸ்பிடலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொல்வது உண்மைதான் என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே.
பின்னால் இருப்பவர்
யார் தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம். தர்ஷன் தரப்பிலிருந்து வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை போலீசார் ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை. தர்ஷன் தரப்பிலிருந்தும் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தரப்பினர் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுபோல இவ்வளவு வேகமாக கைது செய்வதற்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்.
முரண்பட்ட அறிக்கை என்னுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிக் பாஸ் தர்ஷனின் திடீர் கைது குறித்து நான் பார்க்க முயற்சிக்கிறேன். யாராக இருந்தாலும் சரி நியாயமாக இருக்க வேண்டும். ஒரு பார்க்கிங் பிரச்சினைக்கு இவ்ளவு விரைவாக கைது செய்யப்படுவது நிச்சயமாக கேள்விக்குரியது. இரு தரப்பினரின் அறிக்கைகளும் முரண்படுகின்றன.
சனம் ஷெட்டி புகார்
சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இல்லாமல் தெளிவு பெற முடியாது. கைது காலத்தை நீட்டிப்பதற்கு முன்பு சிசிடிவி காட்சிகளை வெளியிடவும். சரியான விசாரணை நடத்தவும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே தர்ஷன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சனம் ஷெட்டி புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரச்சனை
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொள்வதற்கு முன்பு தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அந்த நேரத்தில் சனம் ஷெட்டி மூலமாகத்தான் தர்ஷனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்வதற்கு மறுக்கிறார் என்று சனம் அந்த நேரத்தில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது தர்ஷனுக்கு பிரச்சனை என்ற போது சனம் ஷெட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.