பதிலுக்குப் பதில் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்தியா - பதறும் பாக். பயங்கரவாதிகள்!
காஷ்மீரில் இரத்த ஆறு ஓடியதால் பாகிஸ்தானில் சரந்து ஆறு ஓடதடை.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
அந்தவகையில் இதன் எதிரொலியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு நேற்று (23) அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று (24) பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்துத் துறைகளிலும் உறுதியான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ,இரத்துச் செய்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.