சிறகை விரித்த டிராகன்!... மீண்டும் பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்... திக் திக்எல்லாமே நல்லாவே நடந்தது..
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்!

விண்வெளியில் 280 நாட்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் ( Sunita Williams) இன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். திட்டமிட்டபடி அதிகாலை 3.27 மணிக்கு இந்திய நேரப்படி அந்த விண்கலம் புளோரிடா கடலில் இறங்கிய நிலையில் உடனடியாக மீட்பு வீரர்கள் விண்வெளி வீரர்களை அழைத்துச் சென்றனர்.
போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் 8 நாள் பயணமாக கடந்த ஜூலை மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூட்ச் வில்மோர் ஆகியோர் சென்றனர்.
ஆனால் ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்ப தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் மட்டும் வீரர்கள் இன்றி பூமி திரும்பியது. இந்நிலையில் நீண்ட தாமதத்திற்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்தடைந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அவர்களை மீட்க விண்வெளிக்குச் சென்றது. அந்த விண்கலத்துடன் நான்கு வீரர்கள் சென்ற நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து இந்திய நேரப்படி நேற்று காலை 10:30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு வீரர்களுடன் பூமி திரும்பியது. 17 மணி நேரத்திற்கு பிறகு இந்திய நேரப்படி இன்று காலை 3:15 மணிக்கு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் நுழைந்தது. அப்போது சுமார் 1600 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை ஏற்பட்டது. மேலும் விண்வெளி வீரர்கள் அதிக அளவு அழுத்தத்தை உணர்ந்தனர்.
தொடர்ந்து 3.20 மணிக்கு பூமியை நெருங்கிய டிராகன் விண்கலத்தின் முதல் இரண்டு பாராசூட்கள் வெற்றிகரமாக விரிந்தது. அப்போது நாசாவில் விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகமாக வீரர்களை வரவேற்றனார். தொடர்ந்து அடுத்த கட்டமாக நான்கு பெரிய பாராசூட்டுகள் விரிந்தது. சிறிது நேரத்திலேயே ஃப்ளோரிடா கடலில் டிராகன் விண்கலம் எந்த விதமான பிரச்சினையும் இன்றி இறங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு அமெரிக்க கடற்படை மற்றும் நாசா மீட்பு படை வீரர்கள் விண்கலத்தில் இருந்த வீரர்களை மீட்டனர்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்!
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் ஃபுளோரிடா அருகே கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி ஏராளமான டால்பின்கள் நீந்திக் கொண்டிருந்தன. பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களை டால்பின்கள் வரவேற்பதாக நாசா விஞ்ஞானிகள் கமெண்ட் அடித்தனர்.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்திலிருந்து வெளியே வந்தனர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
இருவரும் விண்வெளியில் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி பூமிக்கு திரும்பியது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் 4 வீரர்களுக்கு பதிலாக இருவர் மட்டுமே சென்றனர்.
சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒருவழியாக இன்று அதிகாலை அவர்கள் பூமிக்குத் திரும்பி உள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் சேர்த்து புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.
இந்திய நேரப்படி நேற்று (மார்ச் 18) காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப் பின் அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அதனைத்தொடர்ந்து, தயார் நிலையில் இருந்த படகு, கடலில் பாதுகாப்பாக இறங்கிய டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. விண்கலம் படகில் ஏற்றப்பட்டு, ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். அடுத்த 30 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் வேகமாகச் சென்று மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தன. இந்த காட்சிகள் நாசா ஒளிபரப்பிய லைவ் வீடியோவில் பதிவாகி இருந்தன. பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களை டால்பின்கள் வரவேற்பதாக நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.