Breaking News
”தொண்டர்களை உற்சாகப்படுத்தவே திமுக Vs தவெக என விஜய் பேசியுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி
பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?
தவெக தலைவர் விஜய் திமுகவை விமர்சித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி, "அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் பேசுவார்கள்" என பதிலளித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், "மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும்.
பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே. அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்" எனத் தெரிவித்திருந்தார்.