பலதும் பத்தும்:- 24,04,2025 - உள்ளூராட்சி சபைத் தேர்தல். தனிநபர் குறைந்த பட்ச செலவீனம்16,318 .
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால்மூல வாக்களிப்பு .

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால்மூல வாக்களிப்பு .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளைய தினமும் (25) எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் மேலும் நீட்டிக்கப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
டான் பிரியசாத்.
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 'நவ சிங்களே தேசிய இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் நேற்று முன்தினம் (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள 'லக்சந்த செவன' வீட்டு வளாகத்தில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்.
யாழில் அதிகரிக்கும் தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்..! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (24)இ நாளை (25) மற்றும் 28இ 29 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள்இ பொலிஸார்இ முப்படைகள்இ பாடசாலைஇ கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் மேற்குறித்த நான்கு நாட்களிலும் தமது தபால்மூல வாக்குகளை பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு 648இ495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் தபால்மூல வாக்களிப்பதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். யூடியூபர் கிருஷ்ணா.
யாழ். யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் விடுதலை செய்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் (23) அனுமதி வழங்கியுள்ளது.
யூடியூபர் கிருஷ்ணா மீதான வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ளுமு ஏடழப என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்திஇ புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவி வருவதாக காட்டிக்கொள்ளும் யூடியூபர் கிருஸ்ணாஇ யுவதி ஒருவர் தொடர்பில் காணொளி வெளியிட்டு சிக்கலில் மாடிக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில்இ தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் நேற்றையதினம் (23) அவரின் விளக்கமறியல் திகதி நிறைவுற்றதை அடுத்துஇ மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் இரத்த சோகையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசிஇ பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்இ உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் அமுல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனிநபர் குறைந்த பட்ச செலவீனம்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி,அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்சத் தொகை ரூ. 16,318 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்திற்காக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, மாவட்ட அடிப்படையில் செலுத்த வேண்டிய அதிகபட்ச தொகை கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது ரூ. 17,599 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த மதிப்பு மொனராகலை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது. இது ரூ. 15,603 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.