Breaking News
வடமாகாணத்தில் பாதுகாப்பற்ற சூழலில் ஊடகவியலாளர்கள்: நீதியான விசாரணையின்மையே காரணம் என்கிறார் சரவணபவன்
.

வட மாகாண ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலிலேயே தமது சேவையினை முன்னெடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினை நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தங்களுடைய சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.
இவ்வாறு பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
அவ்வாறு பதிவாகிய சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமானால் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்காது” என குறிப்பிட்டார்.