Breaking News
ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம்
.

“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின்போது, ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்துகொள்ளப் போவதாகக் கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கின்றதா?’ – என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.