Breaking News
பொதுக்குழுவில் விஜய் ஆவேசம்! "தமிழகத்தில் இரண்டு முனை போட்டி.. அது தவெக vs திமுக இடையே தான்"
தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா?.

TVK Vijay | தவெக பொதுக்குழுவில் விஜய் ஆவேசமாக பேசி, "மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் சொன்னால் போதாது, செயலிலும் காட்ட வேண்டும்" என்றார். 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும்." என்று தவெக பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், "கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு?. அரசியல் என்றால் என்ன.. ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா?.