மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்றதா? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
.

இந்த அரசாங்கத்தினுடைய பிரதான கோட்பாடுகளாக, கொள்கைகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பது ஆரம்பத்திலே இருந்தது.ஆனால், இன்று அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
மாறாக, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் கூட அதேபோன்று வேறொரு சட்டத்தை கொண்டுவருதல் என்ற நிலைப்பாடடில் தான் அரசாங்கம் உள்ளது.இவ்வாறு தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிமைகளை வழங்காத எந்தவொரு அடக்குமுறை சட்டத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.இதன் கீழ் கைதாகி அரசியல் கைதிகளாக பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட மீளவும் சிறையில் அடைக்கப்பட்டு், அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் முன்பிருந்த அரசாங்கங்கள் வழங்கவில்லை
.இவ்வாறு இருந்தவர்களின் ஒருவரின் கையெழுத்தின் ஊடாக விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்கள்.ஆகவே, நாம் அரசாங்கத்திடம் கேட்பது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே ஆகும் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் குறிபபிட்டுள்ளார்.