தமிழ் நாடு ; செய்தித் துளிகள் .
.
தமிழ் நாடு ; செய்தித் துளிகள்.
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்ஹாவில் 850ம் ஆண்டு சந்தனக்கூடு கோலாகலமாக நடைபெற்றது.
நாட்டிய குதிரைகள் நடனமாட ஒட்டகம் மற்றும் பட்டத்து யானை முன்னே செல்ல சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
3-வது முறையாக மோடி பிரதமராவது உறுதி என்பது அனைவரும் அறிந்ததே - திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி.
4-ம் தேதியன்று தமிழ்நாட்டின் உண்மையான தேர்தல் நிலவரம் தெரியும்.
அதிமுக தலைமையில் மாற்றம் வருமா? என்ற கேள்விக்குஇ தேர்தல் முடிவுக்கு பின் அதுகுறித்து பேசுவதாக பேட்டி.
இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்.
தமிழகத்தில் 3.06.2024 முதல் 5 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையும்இ மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்வு.
11-ம் மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது;
12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது;
11-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி ரிட் மனு.
வினாத்தாள் கசிவு விவகாரம் - நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்.
மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துஇ மீண்டும் தேர்வை நடத்த கோரிக்கை.