Breaking News
பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்!
,

பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபர் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் தாக்குதலுக்கான சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவில்லை.
வியாழக்கிழமை தாக்குதல் பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்ததாக தேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.