Breaking News
அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!
,

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று இந்தியா வருகை தருகிறார். இது நான்கு நாள் பயணமாகும். அவருடன் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர். இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் அவருக்கு விருந்தளிக்கிறார். இந்த சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம், இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார, அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் இந்திய குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அமெரிக்கா விதித்து வரும் இந்த சூழலில், குறிப்பாக இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது 26% வரி விதித்துள்ள நேரத்தில் JD வான்ஸின் இந்தியா வருகை கவனத்தை ஈர்க்கிறது.