ஒரே குட்டையில் ஊயிய மட்டைகள்!
பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்று அங்கீகரித்து அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை ஸ்தானத்தை மாற்றியமைக்க கூட தயாரில்லை.

ஒரே குட்டையில் ஊயிய மட்டைகள்
மூன்று வருடங்களுக்கு முன்பே எங்கள் சொற்களஞ்சியத்திலிருந்து சிறுபான்மையினர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டோம்இ
தமிழர்கள்இ முஸ்லிம்கள்இ பறங்கியர்கள் என எந்த சிறுபான்மையினரும் இங்கு இல்லை. இந்த நாட்டில் இரண்டு பிரிவு மக்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று இந்த நாட்டை நேசிக்கும் மக்கள். மற்றொன்று தங்கள் பிறந்த மண்ணின் மீது அன்பு இல்லாத சிறிய குழுக்களை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.
2009 ஆம் ஆண்டு தோழர் மஹிந்த ராஜபக்சே அவர்கள் போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாராளமன்றத்தில் இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது தோழர் அனுரா குமார திஸநாயக்க (2025) அவர்கள் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்று இங்கே யாரும் இல்லை; நாங்கள் இலங்கையர் சமூகம் மட்டுமே என தொடர்ந்தும் தமிழ் பேசும் பகுதிகளில் பதிவு செய்து வருகின்றார்
ஆனால் நியத்தில் தோழர் மஹிந்த ராசபக்சே அவர்களோ அல்லது தோழர் அனுரா குமார திஸநாயக்க அவர்களோ இலங்கை தீவை பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்று அங்கீகரித்து அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை ஸ்தானத்தை மாற்றியமைக்க கூட தயாரில்லை.
இருப்பினும் எண்ணிக்கையில் சிறிய தேச இன மக்களின் அடையாளங்களை சிதைக்க வேண்டும் என்கின்ற சித்தாந்தத்திலும் இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்றும் எண்ணக்கருவிலும் தோழர் மஹிந்த ராஜபக்சே அவர்களுக்கும் தோழர் அனுரா குமார திஸநாயக்க அவர்களுக்கும் ஒன்றுபட்டே நிற்கின்றார்கள்.