Breaking News
கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்!
.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் திா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினா் சரத் பொன்சேக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் கட்சியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இவ்விடயம் தொடா்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே இத்தீா்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அத்துடன், அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.