Breaking News
கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் சுனாமி!
.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கேப் மெண்டோசினோவில் நள்ளிரவு 12.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது.
கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண கவர்னர் தகவல் தெரிவித்துள்ளார்.