பலதும் பத்தும் :- 23,03,2025 - கொழும்பு இரவு விடுதியில் மோதல்,பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்!
தேகாந்த நிலையில் பட்டம் பெற்றார் யாழ் பல்கலை மாணவி!

தேகாந்த நிலையில் பட்டம் பெற்றார் யாழ் பல்கலை மாணவி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாகமரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், அமர்வின் போதுசுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்தநிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு இரவு விடுதியில் மோதல் - சந்தேகநபர்கள் அடையாளம்.
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகஅங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் இன்றையதினம் செம்பியன்பற்றில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கில் இருந்து ஊரில் இருந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள், சென் பிலிப் நேரிஸ் ஆலய வாராந்த திருப்பலியின்போது கௌரவிக்கப்பட்டனர்.செம்பியன்பற்று கடற்தொழிலாளர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன், ஆலய அருட்சகோதரியால் மாணவர்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் அனுமதியின்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதியின்றி மணல் விற்பனை நிலையம் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மணலும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது 28 கியூப் மணல் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதே பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் சமில் முத்துக்குட வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், பண்டிகை காலத்திற்கான சந்தை சோதனைகள் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளதாகக் கூறியுள்ளார்.